June 01, 2012

மனிதனும் மர்மங்களும்


மனிதனும் மர்மங்களும். இந்த புத்தகத்தைப் படித்து உள்ளீர்களா ? இல்லை என்பது உங்கள் பதிலாயிருந்தால் இந்த பதிவை வாசித்த பின்னர் நீங்கள் செய்ய வேண்டிய காரியம் அந்த புத்தகத்தை வாங்கி வாசிப்பதுதான். எனக்கு பிடித்த கிழக்குப் பதிப்பகமும், எனது வணக்கத்திற்குரிய எழுத்தாளர் மதன் அவர்களும் இணைந்த ஒரு புள்ளிதான் மனிதனும் மர்மங்களும்
 

புத்தகப் பெயர்:   மனிதனும் மர்மங்களும் 
ஆசிரியர்: மதன்  
விலை: ரூ.130
வெளியிட்டோர்: கிழக்கு பதிப்பகம்
                                 
நாம் வாழும் இந்த உலகில் எத்தனையோ மர்மங்களும் அமானுஷ்யமான விஷயங்களும் நிறைந்திருக்கின்றன. இந்த மாதிரி parapsychological விஷயங்கள் பற்றி ஆங்கிலத்தில் ஏகப்பட்ட புத்தகங்கள் வெளி வந்துள்ளன. ஆனால் தமிழில் ? குறைவே. மிக குறைவே. வெளி வந்த சில தமிழ்ப் புத்தகங்களும் சுவையானதாக இல்லை என்பதே நிதர்சனமான உண்மை

மதனின் இந்த புத்தகமானது உலகத்தைப் பற்றி நமக்குள் ஏகப்பட்ட கேள்விகளையும் குழப்பங்களையும் எழுப்புகிறது. ஆவிகள் (Ghosts), பறக்கும் தட்டுகள் (Flying saucers), மனம் மூலம் செய்திப் பரிமாற்றம் (Telepathy), தொலைவில் நடப்பதை உணர்தல் (clairvoyance), மனோசக்தியாலே பொருட்களை நகர்த்துதல் (Psychokinesis) போன்ற பல்வேறு விஷயங்கள் பற்றிய அரிதான செய்திகளை அள்ளித் தெளித்திருக்கிறார் மதன். மதனின் அற்புத படைப்புகளில் ஒன்றான இதை தவற விட்டுவிடாதீர்கள்.

புத்தகத்திலிருந்து ஒரு பகுதி உங்களுக்காக :
“ ………..லண்டனில் வசிக்கும் மனோதத்துவ  ஆராய்ச்சி நிபுணர் டாக்டர் ராபர்ட் மாரிஸ் ஆச்சரியமான சோதனையொன்றை நடத்திக் காட்டினார்எலிகளை வைத்து!
ஆழ்மனத்தின் சக்தியைத் துல்லியமாக எடுத்துக்காட்டிய ( சற்றுக் கொடூரமான ) பரிசோதனை அது !
மாரிஸ் சோதனையில் ஒரு கூண்டுக்குள் பத்தொன்பது எலிகள் விடப்பட்டன. அவற்றின் முதுகில் 1,2,3,4,…….. என்று எண்கள் எழுதப்பட்டன. ஒரு நிமிஷ இடைவெளி விட்டு 2,4,6 என்ற எண்கள் கொண்ட எலிகளை மாரிஸ் மின்சாரம் பாய்ச்சிக் கொல்ல ஆரம்பித்தார். அதாவது 2,4,6,8,10,12,14,…….. எண்கள் கொண்ட எலிகள் கொல்லப்பட வேண்டும். 6-வது எலி கொல்லப்பட்டவுடன் இந்த 8,10,12,14,16,18 எண் எலிகள் அச்சத்தில் நடுங்க ஆரம்பித்தன. நடக்க முடியாமல் அவை துவண்டு போயின. அதேசமயம்  1,3,5,7,…… என்ற வரிசையில் உள்ள எலிகள் சாதாரணமாகப் பயமில்லாமல் வளைய வந்தன. ‘வரிசைப்படி எங்களை மாரிஸ் கொல்ல மாட்டார்என்பது புரிந்தது போல!
நாலாம் நம்பர் செத்துவிட்டது. அடுத்து ஆறாம் நம்பராகிய நான்தான்!’ என்கிற கணிதமும் லாஜிக்கும் எலிகளுக்குத் தெரிய சத்தியமாக வாய்ப்பில்லை! ஆனால் டாக்டர் மாரிஸ் மனத்துக்குள் எடுத்திருந்த முடிவை, சம்பந்தப்பட்ட எலிகள் ஏதோ உள்ளுணர்வால் புரிந்துக் கொண்டிருக்க வேண்டும்! மாரிஸ் இந்தச் சோதனையை நடத்திக் காட்டியவுடன் மேற்பார்வையிட்ட பல விஞ்ஞானிகள் விளக்கம் சொல்ல முடியாமல் விழித்தார்கள்……. “
இதைப் போல பல சுவையான விஷயங்கள் நிரம்பிய மனிதனும் மர்மங்களும் புத்தகத்தை உடனடியாக வாங்கி படியுங்கள்…… 

No comments:

Post a Comment