April 06, 2012

வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணம்.....


வாழ்க்கையின் மிகச் சிறந்த தருணம் எது தெரியுமா? அது மற்றவர்களுக்கு உதவி செய்வதினால் ஏற்படும் மகிழ்ச்சி நிறைந்த கணம் தான். உதவி பெற்றவர் மனம் உவந்து பாராட்டும் அந்த இனிமையான வார்த்தைகளே மிக சிறந்த பதங்களாகும்உதவியை பற்றிய ஒரு சிறிய கதை…..
அது அமெரிக்காவில் உள்ள ஒரு சிறிய தபால் நிலையமாகும். ஹாரி என்பவர் அங்கு தவறான முகவரி எழுதப்பட்ட கடிதங்களை பிரித்து எடுக்கும் வேலை பார்த்து வந்தார். ஒருநாள் வழக்கம் போல வேலையில் ஈடுபட்டிருந்த போது அவர் கண்களில் ஒரு வித்தியாசமான தபால் தென்பட்டது. அது சென்றடைய வேண்டிய முகவரிகடவுள்என குறிப்பிடப்பட்டிருந்தது. குழப்பமடைந்த ஹாரி அந்த தபாலை பிரித்து படித்தார். அதில் எழுதப்பட்டிருந்ததாவது:
எனது இனிய கடவுளுக்கு,
நான் ஒரு 83 வயதான மூதாட்டி. சொந்தம் என்று யாரும் இல்லை. எனது ஒரே வருமானம் மாதா மாதம் வரும் பென்ஷன் பணம் தான். அதில் சிற்சில செலவுகள் போக என்னிடம் 100 டாலர் மீதம் இருந்தது. அதையும் நேற்று யாரோ திருடி விட்டனர். அடுத்த வாரம் வரும் அன்னையர் தினத்திற்கு என் தோழிகள் இருவரை டின்னருக்கு அழைத்துள்ளேன். ஆனால் அவர்களுக்கு எதையாவது வாங்கி சமைக்க எதுவும் பணம் இல்லை. நான் உங்களை மட்டுமே நம்பி இருக்கிறேன். தயவு செய்து உதவுங்கள்…..
இந்த கடிதத்தை படித்தவுடன் உருகிவிட்டார் ஹாரி. உடனே தன்னுடன் வேலை பார்க்கும் நண்பர்களிடம் சொல்லி எப்படியோ 96 டாலர் திரட்டி அந்த மூதாட்டியின் முகவரிக்கு அனுப்பி விட்டார். ஒருவருக்கு உதவியதில் ஹாரிக்கு மிக்க மகிழ்ச்சி. சில நாட்கள் கழித்து மீண்டும் அந்த மூதாட்டியிடமிருந்து கடவுள் பெயரிட்ட முகவரிக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. இந்த முறை கடிதத்தை மிக ஆர்வத்துடன் பிரித்தார் ஹாரி.
அதில் எழுதப்பட்டிருந்ததாவது:
கடவுளே! உங்கள் உதவிக்கு நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன். ஆனால் தாங்கள் அனுப்பிய நூறு டாலரில் எனக்கு தொண்ணூற்றி ஆறு டாலர்கள் மட்டுமே கிடைத்தன. எனக்கு தெரியும்! அந்த தபால் நிலைய திருடன்களின் வேலைதான் இதுவென்று”.
உதவி செய்யும் போது உங்களுக்கும் இது போன்ற அனுபவங்கள் ஏற்படலாம். அவற்றை பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து உதவி செய்து வாருங்கள்உலகமே இருக்கிறது உங்களுக்காக…….

No comments:

Post a Comment