February 05, 2012

மாறுபட்ட சிந்தனை-2


சரி. மாறுபட்ட சிந்தனைத் திறனை எவ்வாறு வளர்த்துக் கொள்வது?
அது ஒன்றும் கடினமான செயல் அல்ல. அதற்குரிய முக்கியத் தேவை கற்பனை வளம். கற்பனைத் திறனை வளர்த்துக் கொள்ள நீங்கள் ஒவியனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எட்வர்ட்-டி-போனொவை பொருத்தவரை அறிவுத்திறமை என்பது உங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஒரு சக்தி. சிந்தித்தல் என்பது அதை வெளிக்கொணர உதவும் ஒரு கருவி.

கற்பனை வளமும் அப்படியே.
அது உங்களுக்குள்ளே ஒளிந்து இருக்கிறது. அதை நீங்கள் உணர்ந்தால் உங்களுக்கு மிகச்சிறந்த வாழ்க்கை அமையவிருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. இது விஞ்ஞானிகளின் தொடர்ந்த பற்பல ஆராய்ச்சிகளின் முடிவே ஆகும்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
Very simple. உங்களுக்கு பிடித்த துறை என்ன? உங்களுக்கு எதில் திறமை அதிகம்? இப்படி கேள்வி கேட்க கற்றுக் கொள்ளுங்கள். உங்களைப் பற்றி, உங்களுக்குத் தேவையானதை பற்றி தெளிவாக தெரிந்துக்கொள்ளுங்கள். அதுவே வெற்றியின் முதல் படி….

உங்களுக்கு பிடித்த துறையைத் தேர்ந்தெடுத்து விட்டீர்களா?
இனி அடுத்த கட்டம்இது உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம். நீங்கள் செல்லும் பாதை உங்களுக்கு மிகவும் பிடித்தமானதா என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அதுவே வெற்றிக் காற்றை உங்கள் பக்கம் வீச செய்யும் ஒரு ஜன்னலாக அமையக்கூடும்.
அது 1973-ம் ஆண்டின் வசந்தகாலம். அமெரிக்காவின் புகழ்ப்பெற்ற கல்லூரியான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தான் வில்லியம் ஹென்றி கேட்ஸ்.
சேர்ந்த சில நாட்களிலேயே தான் சாதிக்க வேண்டிய துறை கணிணித் துறை என்பதை முழுமையாக அறிந்துக் கொண்டான். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கணிணி என கனவு கண்டான். அது அவனது கற்பனையின் விளைவே. அது மிகவும் பலமான சிந்தனை.
உலகை மாற்றி அமைக்கக்கூடிய ஒரு சிந்தனை. அதனால் பில்கேட்ஸ் என அழைக்கப்பட்ட ஹென்றி கேட்ஸ் தன் கல்லூரிப் படிப்பை துறக்க வேண்டி இருந்தது. அதன் பின்பு நடந்தது எல்லாம் வரலாறு.
மேற்கொண்டு படிக்க கொஞ்சம் பொறுங்கள்…..

பொன்மொழி:
கற்றுக் கொள்ள தயாராகுங்கள்; சிறகுகள் தானே முளைக்கும்

No comments:

Post a Comment